Search This Blog

Saturday, January 8, 2011

Kamban : "Ulagam Yavaiyum" : "உலகம் யாவையும்"

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 
 நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
 அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
 அன்னவர்க்கே சரண் நாங்களே"

கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம் சொல்லப் புகுந்த காவியத்திலே, முதல் பாடலிலே, கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கும் அந்தப் பாடலிலே, கடவுள் பெயரே இல்லை!


இது போன்று வேறு எந்தக் காவியத்திலும் வந்ததாகத் தெரியவில்லை. எல்லாக் காவியங்களிலும், முதலிலே, ஒரு விநாயகர் துதி இருக்கும். இல்லையென்றால், அந்த நூல் பாடப்பெறும் தெய்வத்தின் பாடல் இருக்கும். ஆனால், இங்கே, இரண்டும் இல்லை. "இந்த உலகத்தினைப் படைத்தும், காத்தும், அழித்தும், இப்படி விளையாட்டாய் அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் அந்த ஒருவரே, எங்கள் தலைவர். அவரது தாளினைகளையே,  நாங்கள் சரணடைகிறோம்" என்று தொடங்குகிறான் கம்பநாடன்.

எந்த ஒரு மதத்தினைச் சார்ந்தவரும், தங்களது தெய்வமே, படைப்பு, காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் புரிகின்றது என்று நினைப்பர். கம்பநாடன், எந்த ஒரு மதத்தினருக்கும் இணங்க, எந்த ஒரு தெய்வத்திற்கும் ஏற்றவாறு, இந்த காவியத்தினை ஆக்க வந்தானோ? அதனால்தான், எந்த தெய்வத்தினையும் சாராமல், அதே சமயம், எல்லா தெய்வத்திற்கும் பொருந்தும் விதத்தில், இந்தப் பாடல் படைத்தானோ?

என்ன  அழகு இந்தப் பாடல்! தமிழ் எனும் அமிழ்து அருந்தத் தொடங்கும் பாடலே, அமிழ்தினும் இனிய பாடலை அமைந்தது அந்த எல்லாமாய் நின்று, அலகிலா விளையாட்டாய் அனைத்தையும் நடத்தி வரும் அந்த தெய்வத்தின் அருளேயன்றி, வேறொன்றும் இல்லை!

15 comments:

  1. அருமையான பாடலும் விளக்கமும். கம்பரசத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை

    ReplyDelete
  2. This song has memorised me over more than fifteen years, coming to my mind often. Often wondered what a spiritual height and enlightened and highly learned Tamil laureate a person should be to write such a wonderful simple poetry. I am awestruck in the very first song.

    ReplyDelete
  3. ‘ஆக்கல், நிலை பெறுத்தல்,நீக்கல் மூன்றும் நீங்கலாக எல்லையில்லாத
    விளையாட்டு உடையவர் தலைவர் அவரிடம் நாங்கள் சரண்’
    என்றுதான் பொருள் தெரிகிறது.
    பிரும்ம தத்துவமமும் இதே

    ReplyDelete
  4. We used to sing this in our school St Joseph hr.sec.chengalpet from 79-85. Love this song.

    ReplyDelete
  5. Reminds me of my teacher DC Krishnamurthy who taught this so enchantingly to us.
    Even after thirty four years
    his voice still rings in my ears.
    Arvindh Shanmugam, Ambur

    ReplyDelete
  6. Reminds me of my teacher DC Krishnamurthy who taught this so enchantingly to us.
    Even after thirty four years
    his voice still rings in my ears.
    Arvindh Shanmugam, Ambur

    ReplyDelete
  7. Lord krishna tells in bhagavad gita tha he is the creator , maintainer and destroyar of this material world
    source
    bhagavad gita 7.6 & 7.7

    ReplyDelete
  8. this is memory poet in our sylabus this poet reminds me my mr shankaran teacher who taught it with sprutual manner iam going back 40 years back...sweet school memories st micheis higher secondary coimbatore

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. No God's name is present in this kadavul vaazhthu. This was used to be sung every morning when I studied in St.Peters Hr.Sec.School, Thanjavur.

    சகல வெளிச்சத்திற்கும் காரணராகிய பரம பிதாவே, இன்றைய தினம் நாங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ள எங்களுக்கு கிருபை தாரும். உங்கள் சமூகத்தின் ப்ரகாசனத்தினால் எங்கள் பள்ளிக்கூடத்தை ஆசீர்வதியும். நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் நாங்கள் உண்மையும், சுறுசுறுப்பும், உற்சாகமுள்ளவர்களாக இருக்க ஆசீர்வதியும். ஆமென்.

    Anybody can chant this kadavul vaazhthu. Eventhough I am from Hindu community, I used to sing this song along with other students without any problem. God bless.

    ReplyDelete
  11. அருமை இனிமை எளிமை அற்புதம்

    ReplyDelete
  12. சுப சிதம்பரம் அம்பத்தூர்

    ReplyDelete
  13. I may go wrong to comment...whom to praise?
    The birth of his...in the lap of this land.
    The sound waves delivered with nector flew out from the rose petal lips.
    The strength of the fingers beholding to write, what is right without fear.
    The creative mind commanding galaxy of thoughts making mankind awestruck.

    ReplyDelete
  14. மனதில் நிற்கும் பள்ளிகால பாடல்களில் ஒன்று!
    என்றென்றும் யாவரும் பாட கூடிய கீதம்!!

    ReplyDelete