Search This Blog

Saturday, May 2, 2015

"ஐயோ" : (அ) மங்கலச் சொல்லா : "Aiyo" : is it a amangalam word?

"ஐயோ" : (ங்கலச் சொல்லா

ஐயோ என்பது தமிழிலே, அமங்கலத்தக் குறிக்கும் ஒரு சொல்லாகவே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரணமாக, ஒரு பயமோ, அதிர்ச்சியோ, துயரமோ வரும்போது, இந்த "ஐயோ" என்ற வார்த்தை, கையாளப்படும். 

ஆனால், ஒரு ஆச்சரியமோ, அற்புதத்தினையோ குறிக்கும்போது, இதனை உபயோகப்படுத்தலாமா? தாராலமாகச் செய்யலாம் என்று, கம்பனாடனும், ஒரு ஆழ்வாரும், நமக்குக் காட்டுகிர்றர்கள். அவை என்ன பாடல்கள் என்று பார்ப்போமா?

கம்பநாடன்: கம்பராமாயணம்: 

"
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய, 
'
பொய்யோ' எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ,
ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்"

அத்தனை உவமையையும் போட்டுப் பார்த்துவிட்டு, கம்பன், அந்த ராமனின் அழகை அதற்கு மேலும் விளக்க முடியாமல், "ஐயோ, என்ன அழகுடா இவன்" என்று சொல்லிவிடுகிறான்!

திருப்பணாழ்வார்அமலனாதிபிரான்இரண்டு முறை "ஐயோ" வருகிறது - பத்து பாடல்களுக்குள்ளேயே!

கையினார் சுரி சங்கனல் ஆழியர், நீள்வரை போல்-
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்,
செய்ய வாய் ஐயோ. என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்
நீல மேனி ஐயோ, நிறை கொண்டது என் நெஞ்சினையே.  (9)